பொறுப்பாளர்கள்

ஆ.ரஞ்சித்

நாவலர் மன்ற செயலர்

வி.ச.லக்ஷயா ஸ்ரீ

துணை நாவலர் மன்ற செயலர்

சு.ஜுலியட் ஹெப்ஸிபா

பேராசிரியர் (G&PB)

செயல் திட்டம்

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்திடினும்
கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம்
பிளந்து இழந்து துடிதிடினும்
பொங்கு தமிழைப் பேச மறப்பேனோ…

என்ற பாரதியின் வார்த்தையை நோக்கமாக கொண்டு தாய்மொழியை சிறப்பாக கொண்டாடி வருகிறது நாவலர் மன்றம்.
ஏட்டில் எத்தனையோ படிக்கும் மாணவர்கள் தாய்மொழியை பறைசாற்ற தவற கூடாது என்று பல செயல்களில் நாவலர் மன்றம் ஈடுபட்டுள்ளது.

தமிழ் கடல் தந்த ஏராள செல்வங்களை மாணவர்கள் அறிந்து பகிர்ந்து கொள்ளவும் மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை தோண்டும் விதமாகவும் நாற்பதுக்கும் மேலான போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழின் பெருமைகளை கொண்டாடும் வண்ணம் முத்தமிழ் விழா வெகு விமரிசையாக இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. தமிழில் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு 9 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவின் முக்கிய பங்காக கவிஞர் . பா. விஜய் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் இயல் , இசை, நாடகம் ஆகிய மூன்று முத்தான தமிழ் வடிவங்களை பாடல்கள், வரலாற்று நாடங்கங்கள் மற்றும் கவிதைகளின் மூலம் தமிழுக்கு மாணவர்கள் பெருமை சேர்த்தனர்.
இவையன்றி அன்றாட வாழ்வில் தமிழின் பங்கு வேண்டும் என்பதற்காக மாணவர்கள் தினம் ஒரு குறள் மற்றும் தமிழ் அறிவோம் போன்ற செயல்பாடுகளின் மூலம் தங்கள் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர்.
மேலும் பல கல்லூரிகளுக்கு இடையேயான தமிழ் போட்டிகளில் நமது மாணவர்கள் பங்கேற்று வெற்றிகளைக் குவித்த வண்ணம் உள்ளனர்.

இது போன்ற பல முறைகளில் நாவலர் மன்றம் தமிழ் சேவையாற்றிக்கொண்டேயிருக்கும்…