முத்தமிழ் விழா

நம் கிள்ளிக்குளம் மாணவர் மன்றம் பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழா 2023 – அன்னைத் தமிழில் கொண்டாட்டம்!!!

40+

போட்டிகள்

9

விருதுகள்

1

சுழல் கோப்பை

சங்கத் தமிழ் மூன்றும் தா
முத்தமிழும் நான்மறையும்
ஆனாய் கண்டாய்

மா, பலா, வாழை என முக்கனியின் சுவையாக குழல், யாழ் தரும் இசையின் இனிமையாக, கன்னித்தமிழ், செந்தமிழ், சங்கத் தமிழ் தரும் மொழிகளின் வளமாக இவை அனைத்தும் தமிழுக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கும் சான்றாக விளங்கியதே.

இவ்வளவு தொன்மையானவற்றை அந்த பொருள் அறிந்து இதன் சுவையறிந்து கொண்டு மேலும் சிறப்பூட்டும் தமிழர்களின் பண்பாட்டுக் கலைகளையும் தமிழ் மொழிகளையும் இனிமை மாறாத இசைகளையும் அள்ளிப் பருகி ஆனந்தத்தில் கொண்டு செல்ல வருகிறது இயல், இசை, நாடகம்.

இயல்பாக உள்ள தமிழ் இயற்றமிழ் அதனொடு இசை சேர்ந்தது இசைத்தமிழ் அவ்விரு தமிழோடு நடிப்பு சேர்ந்தது நாடகத் தமிழ் இம்மூன்று தமிழும் சேர்ந்தது முத்தமிழ்.

அணிவகுப்பு

இயற்றமிழ் :-
ஆசிரியம் முதலா நான்கு பாவினுள்
அறமுதற் பொருளை அமைய பாவி
மோனை முதலாம் தொடையழ தோன்ற
அணிபெறப் பாடுதல் இயற்றமிழ் ஆகும்.
உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினை உடையது இயற்றமிழ். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கி செயல்படுத்தற்குறிய இயல்பினை வழிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது.

சிறப்பு விருந்தினர் – பா. விஜய்

நாடகத்தமிழ் :-
” மோனத்து இருந்த
முன்னோன் கூத்தில்
உடுக்கையில்
பிறந்தது ஓசையின்
சுழலே
ஓசையில் பிறந்தது.
இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது
கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது.
நாட்டிக் கோப்பே.
நாட்டியம் பிறந்தது
நாடக வகையே “
நாடகத் தமிழே காலத்தால் முந்தையது. அது உடலசைவு மொழியில் தொடங்கி விளையாட்டு,நடனம், போராட்டம்,என்று தொடர்ந்து இன்றைய திரைத்துறை வரை நீள்வது. இயலும் இசையும் செவிக்கு தான் இன்பம் தரும். நாடகமோ கண்ணுக்கு இன்பம் தரும் தன்மை படைத்ததாகும்.

காவிய நாடகம்- சிலப்பதிகாரம்

பரதநாட்டியம்

இசைத் தமிழ் :-
யாழும், குழலும், சீரும்,
மிடறும்தாழ்குரல்
ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல்
இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும்
உரிப்பொருள் இயக்கி
தேசிகத்திருவின்
ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த
அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும்,
ஆடல் தொகுதியும்
பகுதிப்பாடலும்
கொளுத்தும் காலை –
‘வசை’ அறுகேள்வி
வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின்
இசையோன்
பண்ணிசைத்து பாடும் தமிழ் எனவும், கூத்து ஆடி பாடும் தமிழினம் கூறப்படும் தமிழ். தமிழரின் வாழ்வே இசையமையம் தான். திருமணத்தில் இசைத்தமிழ் மங்களப் பாட்டு, பெற்ற மழலை விளையாட பாட்டு, வேலை செய்யும்போது தெம்மாங்கு பாட்டு, ஊஞ்சல் பாட்டு இறுதியிலே இழவு வீட்டிலே ஒப்பாரிப்பாட்டு இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரை இசை மயமே.

பாடல்

சிறப்பு பட்டிமன்றம் – நடுவர் அன்ன பாரதி

“தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்த்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?”

என தித்தித்த மொழியுண்டோ
இனி சிந்திக்க மதியுண்டோ?
பொருள் சேர்க்கும் அறமுண்டு
பல மொழியில்
அறம் தவிரா இன்பம் சொன்ன
முதல் மொழியே
எங்கள் தமிழ் மொழியே!!
முப்பால் கொண்ட
தமிழ் கடல் கண்டபின்
எவர்பால் கூடுமோ
இதுபோல் ஒரு காதல்!!
நாற்றிசையிலும் “நம் தமிழ்” என்று
பறைச்சாற்றியே!
நாளைய சந்ததியும் தீராத மோகம்கொண்டு
மும்மொழியவே!…
எத்தனை சிறப்பாம் “எம் தமிழ்” என்றோர்க்கு?
இத்துணை சிறப்பு “எம் தமிழ்” என்று
எடுத்துரைக்கவே!…
பிரம்மாண்டமாம் இந்த “முத்தமிழ் விழா”…

மேற்கத்திய நடனம்

பாரம்பரிய நடனம்

பாடல்-விருதுசுற்று

கலைக்குழு நிகழ்ச்சி 

தெய்வீக நடனம்

கதக் சிறப்பு நடனம்- ராஜிப் கோஷ்

நடனம்- விருதுசுற்று

நகைச்சுவை விருந்து- திரு. செ.ஜெபராஜ்

நகைச்சுவை நாடகம்

இசை அரங்கம்- அலைக்கா இசைக்குழு

விருதுகள்

அறுசுவை அரசி

பா.சுஸ்மிதா, வி.ச சூர்ய பிரபா

கிள்ளி கவிஞன்

சு.சங்கவி

நாட்டிய பேரொளி

மு.நிவேதா

கிள்ளியின் சங்கீத கலாநிதி

ஜா.நிர்மலா  பெர்சீலியா

விவாத வித்தகர்

அபிநயா. த

கிள்ளியின் கல்கி

சுதர்சன்.வெ

தமிழரசன்

தி.அருண்குமார்

திரை ரசிகன்

ச.ச.நா.கிஷோர் குமார், கணேஷ் ராம் .லெ

Runners: செந்தமிழ் கோப்பை

RYZENTRONZZ

Winners: முத்தமிழ் மகுடம்

Rovanzerzz

DESPERADOZZ 2019-2023